மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு
ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோயில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
திருப்பூர், திருமுருகண்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், விஸ்வேஸ்வரர் ஆலயம், வீரராகவ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியில் கோயில்கள் அனைத்தும், தூய்மை நிறைந்த நந்தவனங்களாக காட்சியளிக்கும் என்றார்.
ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோயில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 100 நாட்களில் அவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்காத கோயில்கள் விரைவில் புனரமைக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், வசதிபடைத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
