அரசியல்தமிழ்நாடு

“பேனர் வைப்பதை கைவிடுங்கள்”… திமுகவினருக்கு தலைமை அதிரடி உத்தரவு…

சென்னை, பள்ளிக்கரணை அருகே 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையில் வைத்திருந்த பேனர் விழுந்ததில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதையடுத்து பிளக்ஸ் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என்பதில் தீவிரம் காட்டப்பட்டு வந்த நிலையில், அடுத்த வரும் நாட்களில் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பேனர் வைப்பதை கைவிடாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, திமுகவின் ஆர்.எஸ். பாரதி, பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதை மீறினால், கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பெரும்பாலான திமுகவினர் பேனர் வைக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் என்றும் ஒரு சிலர் இன்னும் பேனர் வைப்பதாகஙவும் அவர் கூறினார்.