இந்தியா

அன்று துப்புரவு தொழிலாளர்… இன்று சப் கலெக்டர்… தடைகளைத் தகர்த்த சாதனை பெண்…

துப்புரவு தொழிலாளி ஒருவர், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து படித்து, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ஆஷா கந்தாரா. திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ஆஷா தனது கணவரால் கைவிடப்பட்டார். 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆஷா கந்தாரா, 1997 ஆம ஆண்டு அவரது கணவரால் ஏமாற்றப்பட்டார்.

இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்க்க முடியு செய்து, தனது பெற்றோர், குழந்தைகளுக்கு ஆதரவாகவும், தனது கனவை நிறைவேற்றுவதற்காகவும் துப்புரவு வேலையை மேற்கொண்டார். இதன் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.

தனது கல்வி பயணத்தையும் உடன் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், தனது விடா முயற்சியால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வருவதற்கு தாமதமானது. இரண்டு ஆண்டுகள் கழித்து, இப்போது உதவி கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விடா முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆஷா கந்தாரா பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

இது குறித்து ஆஷா கூறும்போது, இது ஒரு கடினமான பயணம், நான் நிறைய கஷ்டப்பட்டேன், ஆனால் இப்போது, ​​நான் நலிந்தவர்களுக்கும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்புவதாக கூறினார். தனது வாழ்க்கையின் கொந்தளிப்பான கட்டத்தைப் பற்றி பேசத் தயாராக இல்லை என்றும் ஆஷா கந்தாரி கூறினார். ஜோத்பூரின் வீதிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஆஷா கந்தாரா, தனக்கு எதிராக இருந்த அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து பலருக்கு ஒரு முன்மாதிரி திகழுகிறார்.

அண்மையில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஆனார். அவர்,‘ குழந்தையுடன் தனது கணவனால் கைவிடப்பட்ட நிலையில், எலும்பிச்சம் பழம் விற்று தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார். தற்போது எலும்பிச்சம் பழம் விற்ற பகுதி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பதவியேற்றுக் கொண்டார்.