திமுக அறிக்கையை நம்பி ஏமாந்த மக்கள்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு…
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாகவும், இனி திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடையை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்புர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்குப் பெற அதிமுக அரசு முயற்சி எடுத்தது என்றும் ஆனால் நாடு முழுவதும கட்டாயம் என்ற நிலையில்தான் நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தியதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. வேறு வழியில்லை என்பதால்தான் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்தினோம். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
திமுக வெற்றி பெற்ற வின்னர் நீட் தேர்வு உள்பட எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என்றும், பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகறை நிறைவேற்வில்லை என்றார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றப்போவதில்லை என்று கூறிய அவர் திமுக அறிக்கையை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாக கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை ஏமாந்துவிட்டோம் என்ற நிலையில்தான் வாக்காளர்களும் மக்களும் உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கூறினார்.
