Covid19உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் அரிய வகை நரம்பு கோளாறு!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உருவான கொரோனா தடுப்பூசியால், குய்லின் பார் சின்ட்ரம் என்ற அரிய வகை நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பொதுமக்களுக்கும் அவை செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவில், பைசர், மாடர்னாவைத் தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியால், அரிய வகை நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நரம்புக் கோளாறு ஏற்படும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நரம்பு செல்கள் சேதப்படுத்தப்படுகிறது. இதனால் தசை பலவீனம் அடைவதாகவும், சில நேரங்களில் பக்கவாதம் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு இந்த அரிய வகை நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 42 நாட்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1.28 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் ஏறத்தாழ 100 பேருக்கு நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் 50 வயதைக் கடந்த ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.