அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டு சிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றை மீட்போம்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அதை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சுவாமி சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றை மீட்பதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில், அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிலை தடுப்பு விவகாரங்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். வெளிநாடுகளில் உள்ள சிலைகள் அடையாளம் காணப்பட்டு, மீண்டும் தமிழ்நாட்டக்கு கொணடு வருவது தொடர்பான பணிகள் துரித வேகத்தில் நடைறும் என்றார்.

ஓரிரு நாடுகளில் உள்ள சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எங்கெல்லாம் சிலைகள் கடத்தப்பட்டுள்ளது போன்ற புள்ளி விவரங்களை சேகரித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த சிலைகளையும் மிக விரைவில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.