அரசியல்தமிழ்நாடு

பாஜக பற்றி நான் கூறியது எனது சொந்த கருத்து… இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என சி.வி.சண்முகம் விளக்கம்….

பாஜக பற்றி கூறிய கருத்து தனது சொந்த கருத்து என்றும், இதற்கும் அதிமுகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்ததாகவும், பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழந்ததாகவும் கூறியிருந்தார்.

அவரது பேச்சுக்கு, பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி தொடரும் என்று அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதில் அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பாஜக குறித்து தான் கூறிய கருத்து தனது சொந்த கருத்து என்றும், இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், என்னிடம கேட்டபோது எனது சொந்த கருத்து என்றே தான் தெரிவித்ததாகவும், சி.வி.சண்முகம் கூறினார்.