அரசியல்தமிழ்நாடு

படகில் இருந்த அமைச்சர் இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்த மீனவர்…!

பழவேற்காடில் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது, படகில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டில் ஏரியும், கடலும் சேரும் முகத்துவாரத்தில் கடல் அலை காரணமாக அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி அடைப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க இயலாத சூழ்நிலை எற்படுகிறது. எனவே பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டநிலையில் பழவேற்காடு ஏரியில் முகத்துவாரம் அமையவுள்ள பகுதியில் மீன வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு, உப்புமேடு ஏரியில் மண்ணரிப்பு ஏற்பட்டது தொடர்பாக மீன் வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். உப்புமேடு ஏரிக்கு படகில் செல்வதற்கு அமைச்சர் உட்பட பலர் படகு ஒன்றில் பயணமானார்கள். 7 பேர் மட்டுமே பயணம் செய்யும் அந்த படகில் 30-க்கும் மேற்பட்டோர் பயணமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாரம் தாங்காமல் படகு ஒரு புறம் சாயத் தொடங்கியது. இதையடுத்து, அமைச்சர் பயணம் செய்த படகில் இருந்து சிலர் மற்றொரு படகில் ஏறினர். பின்னர் முகத்துவாரம் பகுதியில் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் கரைக்கு திரும்பியபோது, மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கிச் சென்று கரை சேர்த்துள்ளார்.