கதறும் வாகன ஓட்டிகள்..!இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…
சென்னையில் இன்று (08-07-2021), பெட்ரோல் விலை 101.37 ரூபாயாகவும் டீசல் விலை 94.06 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாட்டு வண்டி காலம் போய் சைக்கிள் வந்தது சைக்கிள் போய் பரிணாமவளர்ச்சியடைந்து பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றில் ஓடும் பைக் மற்றும் காருகள் வந்து விட்டது .
முன்பு பெரிதளவில் பயன்பாட்டில் இல்லாத இந்த பைக்குகளும் காருகளும் தற்போது வீட்டுக்கு ஒருவராவது வைத்துள்ளனர். அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் தேவைகள் அதிகமாகின .ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் சூச்சமங்கள் யாருக்கும் தெரியாது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்தவகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 101.37 ரூபாய் ஆகவும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து 94.06 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
