இந்தியா

குளிக்கப்போன பெண்களை கொடூரமாக தாக்கிய சகோதரர்கள்… மத்திய பிரதேசத்தில் தொடரும் அவலம்…

மத்தியபிரதேசம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் புதுமணப்பெண் ஒருவர் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய அவர், தாய் வீட்டுற்கு செல்ல பயந்து, உறவினர் வீட்டுக்கு சென்றார். அவரை, பெண்ணின் சகோதரர்களும், தந்தையும் மரத்தில் அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆற்றில் குளிக்கப்போன பெண்களை அரை நிர்வாணத்துடன் அடித்த கொடுமை மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

பழங்குடியின சமூகத்தினர் வசிக்கும் பிபால்வா கிராமத்தில் இரண்டு சகோதரிகள், ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கரையில் அமர்ந்து தனது தாய்மாமன்களோடு செல்போனில் பேசியதாக தெரிகிறது. பின்னர் ஆற்றில் குளிக்க சென்ற அந்த பெண்களை, அங்கு வந்த அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அவர்களது தலைமுடியை பிடித்து கரைக்கு இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

பெண்களை எட்டி உதைத்தும், மரக்கம்புகளை கொண்டும் அவர்கள் பலமாக தாக்கினர். அடி பொறுக்க முடியாமல் பெண்கள் கதறியபோதும், ஈவுஇறக்கமின்றி அவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களை அரை நிர்வாணத்துடனேயே அந்த பெண்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். இளம் பெண்களை அடித்த சம்பவத்தில் தாய் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.