சினிமா

முதலமைச்சருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை…

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராவதற்க முன்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முக.ஸ்டாலின் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயணம் மேற்கொண்டார். கோவலத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதலமைச்சரின் பாதுகாப்புக்காக போலீசாரும் உடன் சென்றனர்.

சைக்கிள் பயணம் சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் சிலருடன் முதலமைச்சர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக சைக்கிளிங் செய்து கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்த், முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

நடிகை யாஷிகா ஆனந்த் முதலமைச்சருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.