அரசியல்தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்… அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்…

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தவது குறித்தும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தற்பொது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் துறை அதிகாரிகளிடம் பேசிய முதலமைச்சர், ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கடைகளில் தரமான அத்தியவாசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

கால தாமதம் இன்றி புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் உதவி கோரும் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொது விநியோக திட்டத்தை முழுவதும் கணினி மயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின்கீழ் கொணடு வருதல், நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் – உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சேவையின் பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.