கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி… எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்…
தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாக பரவிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம் கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கிடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்புசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கப்ட்டுள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 7,38,538 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
