Uncategorized

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழைமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் தற்போது காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தவிர வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், வேலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.