சீனாவை யாராலும் அடிமைபடுத்த முடியாது..! அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை!
‘சீனாவை யாரும் அடிமைபடுத்த முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள் ரத்தக்களறியை சந்திப்பார்கள்’ என, சீன அதிபர் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், தியானன்மென் கேட் சதுக்கத்தில் நடந்தது. இந்த விழாவை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் துவக்கி வைத்தார்.
மாவோ ஷியோடோங் போல் உடையணிந்திருந்த அவர் விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார் அதில் தன்னம்பிக்கை காரணமாக, சீன மக்கள் வலிமையானவர்களாக திகழ்கின்றனர். சீனாவை அடிமைபடுத்தும் காலம் நிறைவு பெற்று விட்டது. எந்த நாட்டையும் நாம் அடிமைபடுத்தியது கிடையாது; அடக்கியதும் இல்லை; அடக்குமுறைகளை ஏவியதும் இல்லை. கடந்த காலங்களிலும் இதனை தான் செய்தாம். தற்போதும் இதையே செய்கிறோம். எதிர்காலத்திலும் இதுவே தொடரும்.
எந்த வெளிநாட்டு சக்திகளும், சீனாவை அடக்கவோ, அடக்குமுறைகளை ஏவவோ அடிமைபடுத்தவோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள், 140 கோடி மக்கள்கொண்ட இரும்பு சுவர் முன்னர் ரத்தக்களறியை சந்திப்பார்கள். தலை குனிவு ஏற்படும்.ராணுவத்தின் மீதான கட்சியின் கட்டுப்பாடுகள் தொடரும். ஹாங்காங் மீதான உரிமையை சீனா நிலைநாட்டி உள்ளது. தைவானும், சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
