இந்தியாகுற்றம்

பாலியல் குற்றவாளிக்கு ஆதரவளிக்கும் புதுவை பாஜக எம்.எல்.ஏ… உயிரிழந்த சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு…

தனது மகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், ரவுடிகளைக் கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், புதுவை பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணக்குமார் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி, குருமாம்பேட்டை அமைதி நகரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரு மகள் 17 வயது சிறுமி கல்லூரி படித்து வந்துள்ளார். பரமேஸ்வரியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து, அருண்குமார் என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதை வீடியோவாக படம் பிடித்து எடுத்து வைத்து மிரட்டி, பலமுறை சிறுமியை பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளார். தொடர்ச்சியான பாலியல் சித்ரவதைக்கு ஆளானதால், சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு நடந்ததை சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இதை அறியாத அவரது தாயும், கேரளாவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மகளை அனுப்பியுள்ளர். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் கேட்டபோது சிறுமி உண்மையைக் கூறியுள்ளார்.

இது குறித்து பரமேஸ்வரின் சகோதரி, திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருண்கமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடந்த 19 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறந்த சிறுமியின் தாய் பரமேஸ்வரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, அமைச்சராகவுள்ள சாய் சரவணக்குமார் மீது குற்றம் சாட்டியுள்ளார். எனது மகளை வலுக்கட்டாயமாக சீரழித்து, கொலை செய்த அருண்குமாரை கேரளா நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். பாஜக அமைச்சர் பட்டியலில இடம் பெற்றுள்ள சாய் சரவணக்குமார், அருண்குமாரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், சாய் சரவணக்குமார் ரவுடிகளைக் கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் லோக்கல் கவுன்சிலரும் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும், எனது மகள் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டம் என்றும் பரமேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.