தமிழ்நாடு

சென்னை மின்சார ரயில் : இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது . இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. புறநகர் ரயில்களில் அரசு பணியாளர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவையில் ஆண் பயணிகள் நான் பீக் நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி என்றும் அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

மத்திய, மாநில அரசு பணியாளர்கள் புற நகர் ரயில் சேவையை எப்போதும் பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் அலுவலக ஊழியர்கள் அனுமதி கடிதம் மற்றும் ஐடி கார்டு காண்பித்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

ரயிலில் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு புறநகர் சேவைக்கான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு வருபவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டம் இல்லாமல் பயணிப்பது, காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் புறநகர் ரயில் சேவையை தவிர்க்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.