குழந்தைகளுக்கு விரைவில் கோவாக்சின் தடுப்பூசி..! எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலோரியா தகவல்…
இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலோரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படும் நிலையில், குழந்தைகளின் நலன் நலன் மீது அதீத அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது…
இந்நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது..
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலோரியா தெரிவித்துள்ளார் . இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்த்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
