அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம் ! நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்…! சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அ.தி.மு.க.வின் உணர்வு; தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க.-குரல் கொடுக்க தயாரா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பா.ஜ.க ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசும் போது கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்றார் .

மேலும் பேசிய அவர் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய தி.மு.க. தற்போது மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை சட்டசபையில் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது :

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வர முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறினார்.