உற்சாகத்தில் இல்லத்தரசிகள்..! சரிவில் தங்கம் விலை ! இன்றைய நிலவரம் இதோ !
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,515-க்கும், சவரன் ரூ.36,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வரும் நாட்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்து இருப்பது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது.
