சினிமா

நடிகை கவிதாவின் மகன் கொரோனா பாதித்து மரணம்… திரையுலகினர் ஆறுதல்…

கொரோனா பெருந்தொற்றுக்கு மகனை பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு சக நட்சத்திரங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். கவிதாவின் கணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது திரையுலகினர் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

கொரோனா 2 ஆம் அலையின் தாக்கத்தால் இந்தியாவில் பல்வேறு உயிரிழப்புகள் நிகர்ந்துள்ளன. இதில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் கவிதா நடித்துள்ளார்.

கதாநாயகி முதற்கொண்டு பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடரிலும் கவிதா நடித்து வருகிறார். இவரது கணவர் தசரத ராஜ், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப்-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், சாய் ரூப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் தசரத ராஜ், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கொரோனாவால் மகனை பறிகொடுத்த கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது கணவர் தசரதராஜ், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருந்து வருகிறது.