ஒரு ஏலக்காயில் எண்ணிலடங்கா மருத்துவ குணம்… உங்களுக்கு தெரியுமா?
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நாம் தினமும் ஒரு ஏலக்காயை பயன்படுத்தும்போது, நம் உடலில பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. தினமும் ஒரு ஏலக்காயை வாயில்போட்டு மென்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை பார்க்கலாம்.
• தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். ஜீரன உறுப்புகள் சீராக இயங்கும்.
• நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்கள், சளியால் இருமல் வந்து தொடர்ந்து இருமல் காரணமாக வயிற்றுவலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக அமைகிறது. தொடர் இருமலால் அவஸ்தைப் படுபவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே இருமல் குறைகிறது.
• ஒருவருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஜீரண உறுப்பகளில் ஏற்படும் பிரச்சனைதான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.அவ்வாறு உள்ளவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் துர்நாற்றம் நீங்கப்பெறும்.
• சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் ஏலக்காயை அதிகளவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
• அடிக்கடி ஏற்படும் வாந்தியால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் பொடியை துளசி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் உடனடியாகஅவர்களுக்கு நிவாரணம் கிட்டும்.
• தொண்டை வலி கொண்டவர்கள், 4 ஏலக்காயுடன், ஒரு துண்டு சுக்கு சேர்த்து நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து பருகினால்வறட்டு இருமல், தொண்ட வலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
• ஏலக்காய், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதாகவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றது என்றும்மருத்துவர்கள் கூறுகின்றனர்.
• பேருந்துகளில் பயணிக்கும்போது தலைசுற்றுல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டுமென்று கொண்டிருந்தால் இதுபோன்ற தொல்லை ஏதும் அவர்களுக்கு ஏற்படாது.
• ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய், சரும நலனுக்கு உகந்ததாக உள்ளது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில்சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
சிலர் எந்நேரமும் சூயிங்கம், சிக்லெட், சாக்லெட் என எதையாவது வாயில் போட்டு அசைபோட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்குஎந்த பயனும் ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று வருபவர்கள் ஏராளமான நன்மையை அடைவது என்பது உறுதி.
