12 ஆண்டுகளுக்கு பின் உதயமாகும் புதிய அரசு..! இன்ப வெள்ளத்தில் இஸ்ரேல் மக்கள்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரேலின் 13வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார்.
இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை தேர்தல் நடந்த போதிலும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த மாதம் 23ம் தேதி நடந்த தேர்தலிலும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து 8 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. நாடாளுமன்றத்தில் 60 சதவீத ஆதரவு வாக்குகள் கிடைத்ததை அடுத்து 12 ஆண்டு கால பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து முதல் 2 ஆண்டுகளுக்கு முன்னாள் ராணுவ அமைச்சர் மற்றும் பெருமுதலீட்டாளர் நப்தாலி பென்னட் பிரதமராக இருப்பார் என்றும், வரும் 2023 ஆண்டு முதல் முன்னாள் நிதி அமைச்சரும் Yesh Atid கட்சி தலைவருமான Yair Lapid பிரதமராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
