தமிழகத்தில் முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு !
தமிழகத்தில் முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்களுக்காக 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்ஸிஜன் மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக நேற்று துவக்கி வைத்தனர்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இதுகுறித்து கூறியதாவது :
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாவதாக முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் மத்திய ராணுவ அமைச்சக ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.97.40 லட்சத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் மருத்துவகல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் 200 நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் என அவர் தெரிவித்தார் .
