ஆண்டவனுக்கே ஆதார் அட்டையா? கோயில் நிலத்தில் விளைந்த கோதுமையை விற்க ஆதார் கேட்ட அதிகாரிகள்..
கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்க சென்ற விவசாயிடம், கடவுளின் ஆதார் அட்டை கேட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், பண்டா மாவட்டம், குர்ஹரா கிராமத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன. 7 ஹெக்டேர் நிலம் ராம் ஜானகி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் விளைவிக்கப்பட்ட 10 குவிண்டால் கோதுமையை விற்பனை செய்வதற்காக, அரசு மண்டிக்கு கோதுமையை கோயில் பூசாரி எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், பூசாரியிடம், கோதுமையை விற்க சந்தையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு ஆதார் அட்டை வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோதுமையை விற்க முடியாமல் திரும்பியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களின்படி ஆதார் அட்டையால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விளையும், விளை பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு சிக்கலை முதன் முறையாக எதிர்கொண்டதாக பூசாரி கூறினார்.
