காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்! வீரர்கள் 4 பேர் பரிதாப பலி!
காஷ்மீர் சோபோர் மாவட்டத்தில் அரம்போரா என்ற பகுதியில் இன்று காவலர்கள் மற்றும் CRPF வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோபோர் நகர மார்க்கெட் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னனியில் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பினர்கள் உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
