முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “நவீன விஞ்ஞானி”… அமைச்சர் ஐ பெரியசாமி விமர்சனம்…
கணினிக்கும் ஆன்லைனுக்கும் வித்தியாசம் கூட தெரியாத நவீன விஞ்ஞான ரீதியான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி விமர்சித்தார்.
முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வெறுப்புடன்தான் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்து வருவதாக கூறினார். இதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் இந்த துறையை மிகுந்த விருப்பப்பட்டுதான் ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு துறை மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், இந்த துறையை தமிழகத்திலேயே சிறந்த துறையாக மாற்ற முழு முயற்சியோடு தமிழகம் முழுதும் சிறப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவதாக வருவதாக கூறினார்.
இந்தத் துறையில் செல்லூர் ராஜுக்கு முன்பு கடந்த காலத்தில் மிக சிறப்பான தலைவர்கள் இந்த துறையை கையாண்டுள்ளார்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்தத் துறையை சீர்மிகு துறையாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. யார் யார் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டுகளாக கணினிக்கும் ஆன்லைனுக்கும் இருக்கும் வித்தியாசம் கூட தெரியாத அதிமுக முன்னாள் அமைச்சர் நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார் என அமைச்சர் ஐ பெரியசாமி விமர்சித்தார்.
