இந்தியா vs இலங்கை கிரிக்கெட் போட்டி ! இந்திய அணியில் இடம்பெறும் புதுமுகங்கள் யார் தெரியுமா ?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் தவான் தலைமையிலான இந்திய அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறது .
இலங்கையில் 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பி சி சி ஐ வெளியிட்டுள்ளது .இம்முறை அந்த பட்டியலில் முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட 5 புதுமுக வீரர்கள் தேர்வாகியுள்ளார் .
புதுமுக வீரர்களின் விவரங்கள் :
- தேவ்தத் படிக்கல்
- கிருஷ்ணப்ப கவ்தம்
- சேட்டன் சக்காரியா
- நிதிஷ் ராணா
- ருதுராஜ் கெய்க்வாட்

இவர்களுடன் சேர்ந்து வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் களமிறங்க உள்ளார்.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்திய அணியில் புதுமுகமாக இடம்பெற்றிருக்கும் அணைத்து வீரர்களும் ஐ பி எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
