சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்… சசிகலா ஆதரவாளர் காட்டம்…
கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களுடன், சசிகலா தொலைபேசியில் பேசி வருகிறார். அதிமுக நான் பாடுபட்ட வளர்த்த கட்சி, இதையெல்லாம் பார்த்து சும்மா இருக்கமாட்டேன். நிச்சயம் வருவேன். சரிசெய்வேன் என்ற தொனியில் அதிமுக தொண்டர்களுடன் பேசி வருகிறார். சசிகலாவின் இந்த பேச்சு, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சசிகலா அதிமுகவில் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட பலர் பேசி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர் பேசுகையில், அதிமுக உருவாக காரணமாக இருந்தது முக்குலத்தோர் சமூகம்தான் என்றார். ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக என்றார். மறைந்த ஜெயலலிதா, 1989 ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் நின்றபோது, திமுகவினர் அளித்த தொந்தரவால் அரசியலை விட்டு விலக இருந்தார்.

அப்போது சசிகலா அவர்கள், தோழியாக நான் இருக்கிறேன் என்று கூறி அவரை 5 முறை முதலமைச்சராக்கியவர் சசிகலா என்றார். இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களை உருவாக்கியவர் சசிகலா. ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதலமைச்சராக்கியதும் சசிகலாதான் என்றும் சசிகலாவின் ஆதரவாளர் பேசினார். சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் என்றும் சசிகலாவின் ஆதரவாளர் மிக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார்.
