சினிமா

“நடிகை பார்வதி தமிழ் படங்களில் நடிக்க தடை”… அரசியல்வாதியான பிரபல தயாரிப்பாளர் எதிர்ப்பு…

மலையாள பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பார்வதி மேனன். பூ, உத்தமவில்லன், மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பார்வதி, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இதனிடையே தமிழில் தயாராக உள்ள படத்தில், நடிகை பார்வதி கதாநாயகியாக நடக்க பட நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு நடிகை பார்வதியும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட நடிகை பார்வதி, தமிழ் படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நடிகை பார்வதி, தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு, பிரபல தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். அதே நேரத்தில் நடிகை பார்வதிக்கு தமிழ் திரைப் பிரபலங்கள் சிலர் ஆதரவையும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்களாம்.