அரசியல்தமிழ்நாடு

மத்திய அரசை இனி ”பாரத பேரரசு” என்று அழைப்போம்..! வலைத்தளத்தில் பேசும்பொருளாய் அமைந்த குஷ்பூவின் ட்விட்டர் பதிவு !

பாரத பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசை இனி பாரத பேரரசு என்று அழைப்போம் என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசை ஒன்றிய அரசு ,அல்லது மோடியின் அரசு உள்ளிட வார்த்தைகளால் கூறி வருகின்றனர் .

இந்நிலையில் பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ ட்விட்டர் பதிவின் மூலம் கூறிருப்பதாவது :

தமிழகத்தில் தரம் தாழ்ந்த ஒரு அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது .மத்திய அரசை சிலர் ஒன்றிய அரசு என்று அழைத்தால் நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் என கூறியுள்ளார் .

இந்நிலையில் குஷ்பூவின் இந்த ட்விட்டர் பதிவு அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசும்பொருளாய் பொருளாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.