“ஸ்டாலின் சொன்னா நாங்க ஏன் கேட்கணும்”… முதல்வரை மதிக்காத அமைச்சர்கள்…!
ஆட்டோவில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன் சென்றது தற்போது விவாத பொருளாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதில் ஒன்று, ஒரு ஆட்டோவில் முன் சீட்டில் டிரைவர் மற்றும் பின் சீட்டில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்கிற விதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்யும் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு ஆட்டோவின் பின் சீட்டில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசின் விதிகளை அமைச்சர்களே மீறுவதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு அறிவித்த விதிமுறைகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா? அமைச்சர்கள், எம்.பி.களுக்கு கிடையாதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம் என்று அமைச்சர்களும், எம்.பி-யும் விளக்கம் அளித்திருந்தாலும், ஆட்டோவின் பின்னால் வரும் காரை சுட்டிக்காட்டி இது என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர்களை அடக்க இயலாத முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், எடப்பாடிக்கு உள்ள மரியாதைக்கூட இவருக்கு இல்லை என்பதே உச்சகட்ட உண்மை என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
