சபாஷ் ! விக்ரம்-துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படம்…! மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் !
ஜிகர்தண்டா பேட்ட உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் முதல்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர் . தற்போது இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் குறித்த, புதிய அப்டேட் ஒன்றை கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார்.
ஜகமே தந்திரம் படம் முடிந்ததும் கார்த்திக் சுப்பாராஜ் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கினார். அப்பாவும், மகனும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . இது விக்ரமின் 60 வது படமும்கூட.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரிப்பால் ஊரடங்கு போடப்பட்டது .இந்த ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்ட படங்களில் இந்தப் படமும் ஒன்று.

ஜுன் 18-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் வெளியாகிறது. கொரோனா தொற்றும் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு விரைவில் விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், ஊரடங்கு விலகிய பின் படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாகவும், முதலில் விக்ரம், வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவித்து, பாதியில் அவரை மாற்றி சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
