இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ..!காரணம் என்னவாக இருக்கும் ?
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
முதலமைச்சருடன் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சந்திக்க உள்ளனர். ஆளுநருடனான சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 2வது அலையை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடுமையான ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் எடுக்க கூடிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
