அரசியல்தமிழ்நாடு

முதல்வர் கண்ணசைத்தால் போதும் ! நாங்க 38 பேரும் களமிறங்க ரெடி ..!அதிரடி காட்டும் கனிமொழி எம்பி!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கண்ணசைத்தால் போதும் எம்பிக்கள் எல்லாம் நாங்க ரெடி.. நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து பிரதமர் மோடியிடம் நேரிலேயே சென்று வலியுறுத்துவோம்” என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் கோரதாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..

அதற்காக, தன்னுடைய தொகுதியில் தொடர்ந்து அவர் முகாமிட்டு வருகிறார்… தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் நிழல் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை அள்ளி தெழில்த்துள்ளார் .

Image

விழிப்புணர்வுகள், அதிரடி ஆய்வுகள் என தூத்துக்குடியில் பம்பரமாய் அவர் சுழன்று கொண்டிருக்கிறார் . நேற்றுகூட தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து ஆபீசில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்.பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாகவே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். கிராமங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Image

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய கொரோனா தடுப்பூசி இன்னும் வரவே இல்லை.இதனால், இன்னும் பல மாவட்டங்களில் போதியளவு தடுப்பூசி போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது .

திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த ஒரு மாத காலத்தில் மக்கள் நலப் பணிகளை முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார்.மகளிருக்கு நகர பேருந்தில் இலவசமாக பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஒரு ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளார். திமுக நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது.தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார்.

மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார். அதேசமயம், தமிழக முதல்வர் கண்ணசைத்தால் போதும் எம்பிக்கள் அனைவரும் நேரில் சென்று பிரதமரை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்” என்றார் கனிமொழி.
.