குற்றம்தமிழ்நாடு

கர்ப்பிணி மனைவியை நண்பருக்கு விருந்தாக்கிய சைக்கோ கணவன் ..! கடலூரில் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம் !

கடலூர் மாவட்டம் பண்ட்ருட்டியை அடுத்த எல்.ஆர். பாளயத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் போலீசாரை பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

ஜெயமணியின் மனைவி கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது, எங்களுக்கு 2018இல் திருமணம் நடந்தது. எனது கணவர் அதிக குடிப்பழக்கம் உடையவர். மதுக்காக எதையும் செய்யக்கூடிய சைக்கோ.

5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சத்து மாத்திரை என்று கூறி மயக்க மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்தார். நானும் எனது கணவன் மேல் உள்ள நம்பிக்கையில் அதை போட்டுகொண்டு அரை மயக்கம் அடைந்துவிட்டேன்.அப்போது அவரது நண்பரான சுந்தரமூர்த்தியை அழைத்து வந்து என்னை பலாத்காரம் செய்ய செய்ய வைத்துள்ளான் அந்த கொடூரன் .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் என்ற மற்றொரு கூட்டாளியை அழைத்து வந்து அவருடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினான் . நான் எவ்வளவோ முயற்சித்தும் என்னால் தப்ப முடியவில்லை. மேலும், நான் கர்ப்பிணியாக இருந்தபோது சுந்தரமூர்த்தி என்பவரை அழைத்து வந்து பலாத்காரம் செய்த விஷயத்தை அப்போதுதான் அந்த சைக்கோ கொடூரன் என்னிடம் கூறினான் .

இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன் என ஜெயமணி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் அந்த புகாரில் கூறியிருந்தார். அத்துடன் சில தினங்களுக்கு முன்பு வேறு சிலருடன் கூட்டுறவு வைத்துக்கொள்ள ஜெயமணி வற்புறுத்தியதாகவும், அப்போது அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக ஜெயமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவன் செய்த அனைத்தையும் ஒப்புக்கொண்டான் . இதை தொடர்ந்து ஜெயமணி அவரது கூட்டாளிகள் சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகியோர் மீது பலாத்கார வழக்கை பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ட்ருட்டியை அடுத்த எல்.ஆர். பாளையத்தில் வாழ்கை முழுவதும் பாதுகாப்பு அளித்து துணையாக இருக்க வேண்டிய கணவனே இப்டி ஒரு கொடூர சம்பவம் நடக்க காரணமாக இருந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது