கோயில் வாசலில் அசைவ உணவு கொடுப்பதா? திமுகவினரின் செயலுக்கு பொதுமக்கள் கண்டனம்…
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் வாசலில் முன்பு திமுக எம்.பி. தயாநிதி மாறன், எம்.எல்ஏ. எழியலன் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கிய தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி திமுகவினரால் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இருக்கும் இடங்களிலேயே கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் மற்றும் எம்.எல்.ஏ. எழிலன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது. அங்குள்ள பெருமாள் கோயிலின் வாசலில், கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
பெருமாள் கோயில் வாசலில் வைத்து, பொதுமக்களுக்கு அசைவ உணவுகள் வழங்குவதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்களாக இருப்பதால், கோயில் வாசலில் வைத்து அசைவ உணவு கொடுப்பதா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
