அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சியில் கொரோனா பலி அதிகரிப்பு…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…

திமுக ஆட்சியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்தும் அடிப்படை வேலைகளைக்கூட திமுக செய்யவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

காயிதே மில்லத்தின் 126 பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாள்ரகளிடம பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கொரேனா கொரோனா தீவிரமாக உள்ளது என்றால். சரியான திட்டமிடலுடன் தொற்று பரவலை கட்டுப்படுத்தவதற்கான அடிப்படை வேலைகளைக்கூட திமுக செய்யவில்லை என்றார். கண்காணிப்பு மையங்கள் குறைவாக உள்ளதாக கூறிய அவர், கொரோனா பரிசோதனை எடுப்பவர்களுக்கு முடிவுகள் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகுதான் வருவதையும் அவர் சட்டிக்காட்டினார்.

அதேபோல் திமுக ஆட்சியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போதுள்ள முதலமைச்சரின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை. மக்களும் கேட்பதில்லை. 10 பேருக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடும் கட்சி அதிமுக அல்ல என்று கூறிய ஜெயக்குமார், ஈபிஎஸ் – ஓபியஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவர்களது சந்திப்பு யதார்த்தமானது என்றும் கூறினார்.