அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாகி வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 32,646 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையும் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் தற்போது 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றும், மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொண்டு கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 3700 மருத்துவ பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் 30 ஆயிரம் மருந்துகள் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு தேவைப்படுகிறது. கருப்பு பூஞ்சைக்காக மத்திய அரசின் சார்பில் 1,790 மருந்துகள் தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில், கூடுதலாக மருந்துகள் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.