தமிழ்நாடு

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழகத்தின் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1000 புதிய பேருந்துக்களை வாங்க ரூ.500 கோடி நீதியை ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு தலா 58.5 லட்சம் விலையில் 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. மேலும் விழுப்புரம்,கோவை, கும்பகோணம், மதுரை,திருநெல்வேலி, ஆகிய கோட்டங்களுக்கு சேர்த்து 800 புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

அதே போல் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தலா 15.75 லட்சம் விலையில் 85 பேருந்துகள் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் கோவை மற்றும் மதுரை மாநகரை சேர்ந்த 415 பேருந்துகள் புதுப்பிக்கப்பட உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்க தற்போது நிதி ஒதுக்கி அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.