அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி புத்தகத் திருவிழா – விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பலூன் பறக்க விட்ட கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சாலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் 4வது புத்தக திருவிழா, 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் நெய்தல் திருவிழா மற்றும் அதனையொட்டி நடைபெற இருக்கும் புகைப்பட கண்காட்சியின் முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி எம்பி .

முன்னதாக, இந்த நிகழ்ச்சிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.