தமிழ்நாடு

தூத்துக்குடி புத்தக திருவிழா : சிறப்பு‌‌ விருந்தினர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவித்த கனிமொழி எம்பி..!

தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி பிரிவு சாலை அருகில் உள்ள மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று 21/04/2023 கோலாகலமாக தொடங்கி‌ நடைபெற்றுவரும் 4-வது புத்தக திருவிழாவில் “வரலாற்றில் தூத்துக்குடி” என்ற‌ தலைப்பில் முனைவர் ராஜேந்திரன் (இந்திய ஆட்சிப்பணி பணிநிறைவு) “புத்தகத்தோடு‌ உரையாடுவோம் – சமத்துவமாய்‌ உரையாடுவோம்‌” என்ற தலைப்பில் கிரேஸ் பானு “வாக்கினிலே இனிமை வேண்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்,கனிமொழி எம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு‌‌ விருந்தினர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்