சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு செய்ய இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி..!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்ய இன்று (ஏப்ரல் 3)முதல் ஏப்ரல் 6 முடிய 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி பங்குனி மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு, பிரதோஷ நாளான இன்று (ஏப்ரல் 3 முதல்) ஏப்ரல் 6 வரை , தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
