அரசியல்தமிழ்நாடு

புதிதாக அமைய இருக்கும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று (21/01/2023) சனிக்கிழமை, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் புதிதாக அமைய இருக்கும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார் கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திரு.சாரு ஸ்ரீ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமிகு.பிரம்மசக்தி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்