அரசியல்தமிழ்நாடு

தேவையின்றி கொந்தளிக்கும் திமுக அதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழக ஆளுநர் ஆர்,என். ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன. இதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கடிதம் இன்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .

இதுகுறித்திஉ பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’’தி.மு.க.வுக்கு ஆளும் கட்சியாக இருக்கும்போது தான், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னாரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் மூலம், அன்றைய அ.தி.மு.க. அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என தி.மு.க.வினர் நினைக்க வேண்டாம்’’ என்கிறார்.

அவர் மேலும், ‘’ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர். எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிதான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கென வகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.