இறுதி வரை பரபரப்பு : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி இறுதியி சிறப்பாக விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மசூத் 52 ரன்களும், இஃப்தார் அகமது 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும், அக்சர் பட்டேல் 2 ரன்களிலும் வெளியேறினர். இதனையடுத்து கூட்டணி அமைத்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இந்நிலையில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டாகினார். இதனையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து வீசிய பந்து நோபால் ஆகிய நிலையில், அதில் விராட் கோலி சிக்சர் அடித்தார். இதனையடுத்து 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃப்ரீகிட் பால் போல்ட் ஆகி பின்னால் சென்றது. அதில் 3 ரன்கள் கிடைத்தது.
அடுத்து 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் ஷ்டம்பிங் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்.அஸ்வின் களமிறங்கினார். இந்நிலையில் அந்த பந்து ஒயிட் ஆனது. இதனையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், தூக்கி அடித்து ஒரு ரன் எடுத்து வெற்றியை பெற்றுக்கோடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை நின்று போராடிய விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும். .
