விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..! பேட்டிங்கில் மீண்டும் அதிரடி காட்டப்போவது யார் ..?

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் லீக் போட்டியுடன் வெளியேறியது.

இதையடுத்து தொடரின் முதல் தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது தகுதி சுற்று போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், பாப் டூபிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர் .

இன்றைய இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குஜராத் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்கு செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்தித்து வெளியேறப்போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .