பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைக்கோள்..! வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா..
பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பூமியைக் கண்காணிக்கும் வகையில் காவோபென்-303 என்ற செயற்கைக்கோளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். இந்நிலையில் இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச் -4சி ராக்கெட் மூலம் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த செயற்கை கோள் ரேடார் படங்களை பெறவும், நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், மற்றும் அவசர கால பேரிடர் தடுப்பு மற்றும் தரவுகளை பெறவும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனா்.
