மோகன்லாலின் ‘எம்புரான்’ திட்டமிட்டபடி ரிலீஸ்.. ரசிகர்கள் உற்சாகம்!
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது. லைகா மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்தது.
மோகன்லாலின் ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது. அதன்படி படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இதன் இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே இதிலும் நடித்துள்ளனர். அவர்களோடு சில முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2023 அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிதாபாத்தில் தொடங்கியது.
கோகுலம் மூவிஸ் நிறுவனம் லைகா முதலீடு செய்த பணத்தை கொடுத்துவிட்டதால் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படம் வரும் மார்ச் 27-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் படப்பிடிப்பு, உலகம் முழுக்க பல இடங்களில் நடைபெற்றது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும்.
