voting

TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி…144 எம்எல்ஏக்கள் ஆதரவு..

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.

Read More
Election 2026அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் – திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

Read More